ETV Bharat / state

6 டன் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது! - உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு

ராமநாதபுரம்: கமுதி அருகே மதுரைக்கு கடத்த முயன்ற ஆறு டன் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்மந்தப்பட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆறு டன் ரேசன் அரிசி பறிமுதல்
ஆறு டன் ரேசன் அரிசி பறிமுதல்
author img

By

Published : Nov 2, 2020, 8:10 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழியில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் இருந்த போது சரக்கு வாகனத்தில், 50 கிலோ வீதம் 120 மூட்டைகளில் ஆறு டன் ரேஷன் அரிசியை மதுரைக்கு கடத்திச் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர்.

அதன்பின்னர், கடத்தி வந்த வாகனங்கள், அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உணவு தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மதுரையை சேர்ந்தமுருகன், ராமமூர்த்தி, திருவாரூரை சேர்ந்த வினோத், வினோத்குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யபட்டனர்.

ஆறு டன் ரேசன் அரிசி பறிமுதல்

அதுசமயம், பிடிபட்ட ரேஷன் அரிசியை கமுதி நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் ஒப்படைத்தனர். சில தினங்களுக்கு முன்பு 800 கிலோ பருப்பு கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்றவர் வெட்டி கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.