ETV Bharat / state

சவுதியில் உயிரிழந்த கணவர் - உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி கண்ணீர் - fisherman

மீன் பிடி தொழிலுக்காக சவுதிக்கு சென்று உயிரிழந்த கணவனின் உடலை மீட்டுத்தரக்கோரி தமிழ்நாடு அரசிடம் பெண் ஒருவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கணவன் உடலை மீட்கக்கோரி மனைவி மனு  சவூதியில் உயிர் இழந்த மீனவர்  முதலமைச்சரிடம் வேண்டுகோள்  மீனவர்கள்  wife urge cm for recover husband body from saudi  fisherman  fisher man died in saudi
உயிரிழந்த கணவன் கண்ணீரில் மனைவி
author img

By

Published : Oct 12, 2021, 2:51 PM IST

ராமநாதபுரம்: திருவாடானை அருகே உள்ள முள்ளிமுனை ஊராட்சியை சேர்ந்த ராமர் (35) மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

கடந்த 13 வருடங்களுக்கு மேலாக சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் திரும்பி, குடும்பத்துடன் சிறிது காலம் இருந்து, மீண்டு கடல் தொழில் செய்ய செல்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்கு வந்த இவர், கரோனா காரணமாக, ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி அன்று ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி மாலத்தீவு சென்று, அங்கு 15 நாள்கள் தங்கி, பின் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று சவுதி சென்றதாக, மனைவி கலை நிவேதியா மற்றும் குடும்பத்தினரிடம் தகவல் அளித்துள்ளார்.

கண்ணீருடன் மனைவி

இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி கடலுக்கு சென்ற அவர் 4 ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் மட்டும் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. அங்குள்ள உறவினர்கள் முலம் உடல் சொந்த ஊர் வந்துவிடும் என்று எண்ணி ஒரு மாதம் கடந்து நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் நேற்று (அக்டோபர் 11) ஏழு மாத கர்ப்பிணியான மனைவி கலை நிவேதியா இரண்டு கைக்குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) காமாட்சி கணேசனிடம் மனு அளித்தார்.

இது குறித்து செய்தியாளரிடம் அவர், “இரண்டு கை குழந்தையுடன் ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். என் கணவர் உடலை சொந்த ஊர் எடுத்துவர தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

எங்க வீட்டில் அவரின் உழைப்பை நம்பி நாங்கள் வாழ்வை நடத்தி வந்தோம். இப்போது அவரை பறிகொடுத்து நிற்கிறேன். 12 வகுப்பு படித்த எனக்கு தகுதிக்கேற்ப வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும்” எனக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: வீழ்த்தப்பட்ட 3 பயங்கரவாதிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.