ராமநாதபுரம்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, கரோனாவுக்குப் பிந்தைய பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டோர் கடும் சிரமப்படும் நிலை உள்ளது.
குறிப்பாக கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று ஏற்படும்போது மிகத் தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், தற்போது வரை 6 பேர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது முதியவர் கடந்த மாதம் சிகிச்சைப் பலனின்றி மதுரையில் உயிரிழந்தார்.
இதனிடையே, நேற்று (ஜூன்.25) பரமக்குடியில் டவுன் பகுதியில் வசிக்கும் 57 வயதுடைய ஆண், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார்.
இதனையடுத்து, கருப்புப் பூஞ்சையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ராமநாதபுரத்தில் 2 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 921 பேருக்கு கறுப்புப் பூஞ்சை உறுதி