தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு கட்டுப்பாடுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும், மீறினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்களில், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்கள், 5 நெடுஞ்சாலை ரோந்து பிரிவு ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்புப் பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா விதிகளை பின்பற்றாமலும், ஊரடங்கு தடையை மீறி அநாவசியமாக வெளியில் சுற்றியவர்கள் என தற்போது வரை 854 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் மொத்தமாக 24 ஆயிரத்து 742 வழக்குகளில் ரூ.37 லட்சத்து 99 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி. கார்த்திக், கரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க மருத்துவக் குழு பரிசீலினை!