ETV Bharat / state

துபாயில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் கோரிக்கை!

ராமநாதபுரம்: துபாயில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

துபாயில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் கோரிக்கை!
துபாயில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் கோரிக்கை!
author img

By

Published : Sep 3, 2020, 4:36 PM IST

ராமநாதபுரம் அருகே அரியக்குடி புத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் கட்டுமான பணிக்காக சென்றார். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக குடும்பத்துடன் சரியான தொடர்பு இல்லாத காரணத்தால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், துபாயில் உள்ள ராமச்சந்திரனின் அண்ணன் பால்பாண்டி மூலமாக விசாரணை செய்தனர்.

ராமச்சந்திரைனைச் சந்திக்கச் சென்றபோது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பால்பாண்டிக்கு தகவல் தெரியவந்துள்ளது. கட்டுமான பணியின்போது அவர் கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக பால்பாண்டி மூலனாக ராமச்சந்திரனின் குடும்பத்திற்கு தெரியவந்தது.

இதையடுத்து, மீண்டும் ஒருமுறை சகோதரனைச் சந்திக்க பால்பாண்டி மருத்துவமனைக்குச் சென்றபோது, ராமச்சந்திரன் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இது குறித்து அவர் வேலை பார்த்து வரும் கம்பெனி எந்தத் தகவலையும் முறையாக சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், பால்பாண்டியை மிரட்டி தனது சகோதரனின் உடலை வங்கிக் கொண்டு ஊர் திரும்பச் சொல்வதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கைகள் எடுக்கக் கோரி ராமச்சந்திரனின் மனைவி ஜோதியும் அவரது இரண்டு குழந்தைகளும், அரியக்குடி புத்தூர் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோரும் இன்று (செப்.,3) ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் திரண்டனர்.

துபாயில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் கோரிக்கை!

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, ”உயிரிழப்பு குறித்த காரணம் தெரிய வேண்டும். ராமசந்திரன் உடலை சொந்த ஊர் எடுத்து வர அரசு வழிவகை செய்ய வேண்டும். இரண்டு குழந்தைகளின் எதிர் காலத்தையும், குடும்ப வறுமையையும் கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஆட்சியர் வீர ராகவ ராவிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:ஜப்பானில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.