ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்! - ராமநாதபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர்

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் இன்று (ஏப். 30) நேரில் ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம்
ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம்
author img

By

Published : Apr 30, 2021, 10:08 PM IST

ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இன்று (ஏப். 30) நேரில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியபோது, 'ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி காலை 8.00 மணி முதல் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம்
ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேசைகளும், தபால் வாக்குகளை எண்ண தலா 8 மேசைகளும் நிர்ணயிக்கப்பட்ட அறைகளில் தனித்தனியாக அமைக்கப்படும்.

ஒவ்வொரு மேசையிலும் ஒரு நுண்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதி எந்த மேசையில் பணியாற்றிட வேண்டுமென்பது குறித்து கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

தொகுதிகள்

  • பரமக்குடி தொகுதிக்கு 26 சுற்றுகள்,
  • திருவாடானை தொகுதிக்கு 30 சுற்றுகள்,
  • ராமநாதபுரம் தொகுதிக்கு 31 சுற்றுகள்,
  • முதுகுளத்தூர் தொகுதிக்கு 32 சுற்றுகள் முறையே வாக்குகள் எண்ணப்படும் .

அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர், ஒவ்வொரு சுற்று வாரியாக மொத்த வாக்கு எண்ணிக்கை விபரங்களை அறிவிப்பார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் பணியாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி, ஊடகத்துறையினர் உள்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை சான்று அல்லது கரோனா தடுப்பூசி (இரண்டு தவணை) போட்டுக்கொண்ட சான்று அவசியம்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைப்பேசி கொண்டு செல்ல அனுமதியில்லை. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட அரசு வரையறுத்துள்ள அனைத்து கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.