ETV Bharat / state

இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரதம்! - மீனவர்கள் உண்ணாவிரதம்

இராமநாதபுரம்: இராமேஸ்வரத்தில் இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரதம்!

author img

By

Published : Jan 27, 2021, 3:53 PM IST

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கோட்டை பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற பொழுது இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதில் 4 மீனவர்கள் உயிரிழந்தனர்.

இதனைக் கண்டிக்கும் விதமாக இன்று தங்கச்சிமடம் அருகே உள்ள வலசை பேருந்து நிலையத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை மீனவ தொழிற்சங்கங்கள் சார்பில் மீனவர்கள் நடத்தினர்.

இந்தப் பேரணியில் இலங்கை அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் 6 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதில் கடந்த 18ஆம் தேதியன்று கோட்டை பட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதிவு செய்து, தனி விசாரனை ஆணையம் அமைக்க வேண்டும்.

இலங்கை கொடுஞ்சிறையில் உள்ள 9 மீனவர்களை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள இந்திய படகுகளை மீட்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இலங்கை அரசால் விடிவிக்கப்பட்டு மீட்க முடியாமல் முழ்கிப்போன இந்திய விசைப்படகுகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 1974 கச்சத்தீவு ஒப்பந்த 6ஆவது சரத்திலுள்ள பாரம்பரிய மீன்பிடி பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை அமல்படுத்த வேண்டும். அதேசமயம் இந்திய மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தாக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு மோடி அரசும் கூட்டுதான்: வைகோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.