ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன்பிடித் துறைமுகம் அருகே விசைப்படகு மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் மீனவ பிரநிதி சகாயம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுப் பரவல் தடை காரணமாக மார்ச் 20ஆம் தேதியிலிருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மீன்பிடித் தடைக்காலமும் அமல்படுத்தப்பட்டது. மீன்பிடித் தடை முடிந்து கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்த இறால் மீன்களுக்கு உரிய விலையும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து டீசல் விலையும் அதிகரித்துவருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க..இருதரப்பினரிடையே மோதல்: இருவர் படுகாயம்!