ராமநாதபுரம்: கடலாடி தாலுகாவிற்குட்பட்ட ஆரைகுடி கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ராஜீவ் காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருநாளைக்கு 230 ரூபாய் வழங்க வேண்டிய ஊதியத்தை 100 ரூபாய் மட்டுமே வழங்குவதாக கூறி, இன்று (அக்.04) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அந்த கிராமத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், ’நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக 100 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குறைவான ஊதியம் கொடுப்பதை பற்றி கேட்டதற்கு அவ்வளவு தான் தரமுடியும், முடிந்தால் வேலை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு, ஒருநாள் ஊதியத்தை மட்டும் எங்களுக்கு அளித்து விட்டு மீதமிருக்கும் ரூபாயை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்” என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க:IPL 2021 DC vs CSK: சென்னை பேட்டிங்; ரெய்னாவுக்கு ஓய்வு