ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக கடந்த 5ஆம் தேதி கார்த்திக் பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை மாவட்ட காவல்துறையில் ஏற்படுத்தி வருகிறார்.
குறிப்பாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் அந்தந்த பகுதிக்கான காவலர்கள் தொடர்பு எண்ணை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையதளங்களில் பதிவு செய்கிறார். இதன்மூலம் தேவையான நபர்கள் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் காவல்துறையினருக்கு தொடர்புகொண்டு உதவிகளைப் பெற்றுக் கொள்ள இது எளிய வழியாக அமையும் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் தற்போது பொது மக்கள் குறைகளை தெரிவிக்க 8778247265 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளார். இந்த தொலைபேசி எண்ணில் சட்டவிரோத செயல்கள், மணல் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் ரகசிய தகவல்கள் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாப்பாக காக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.