ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுக்காவிற்கு உட்பட்ட இந்திரா நகர் காலனி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக இறால் பண்ணை அமைக்கும் பணியை அப்பகுதியில் சிலர் தொடங்கி உள்ளனர். இறால் பண்ணை அமைக்கப்பட்டால் அப்பகுதில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதுடன் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்பதால் இதனை தடுக்கக்கோரி அப்பகுதியில் வசிக்கு 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவிடம் மனு அளித்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுத்து இறால் பண்ணை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு கொடுக்க வந்திருந்த பெண்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: மீன் குட்டையை உப்பு இறால் குட்டையாக மாற்ற எதிர்ப்பு!