ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே உள்ள இந்திய கடற்படை விமான தளத்திற்கு வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்த 102 வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 29 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அதனருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ராமநாதபுரத்தில், நோய்த்தொற்று எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... விசாகப்பட்டினம், மின்சாரம் பாய்ந்து கடற்படை அலுவலர் உயிரிழப்பு