ETV Bharat / state

புகையில்லா போகியை வலியுறுத்தி அரசுப் பள்ளி மாணவர்கள் பேரணி

author img

By

Published : Jan 14, 2020, 9:42 AM IST

ராமநாதபுரம்: புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட வலியுறுத்தி சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

Bhogi
Bhogi

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு முகாம் பேரணி நடைபெற்றது.

பள்ளியில் செயல்பட்டுவரும் தேசியப் பசுமைப் படை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சர் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்றம் இணைந்து புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். சர் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்ற ஆசிரியர் செந்தில் வடிவேலன் வரவேற்புரையாற்றியானர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு, போகிப் பண்டிகை, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் போகியைக் கொண்டாடவும், இதனைக் கருத்தில்கொண்டு அதனைக் கைவிட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, இது குறித்த பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் சாலை வீதிகளில் விழிப்புணர்வுப் பேரணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க...

பொங்கல் பண்டிகைக்கு களைகட்டாத கோயம்பேடு!

Intro:இராமநாதபுரம்
ஜன.13

சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையில்ல போகிபண்டிகை விழிப்புணர்வு பேரணி.Body:இராமநாதபுரம் மாவட்டம், சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா போகிபண்டிகை கொண்டாடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியில் செயல்படும் தேசியப் பசுமை படை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சர் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்றம் இணைந்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முகாமில் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். சர் ஐசக் நியூட்டன் அறிவியல் மன்ற ஆசிரியர் செந்தில் வடிவேலன் வரவேற்று பேசினார். பொங்களுக்கு முதல் நாள் போகி ஆக கொண்டாடப்பட்டு வருகிறது அந்நாளில் வீட்டில் பயன்படுத்திய பழைய பாய் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கிறது என்பதை கருத்தில்கொண்டு மக்கள் அதனை கைவிட வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் போகியை கொண்டாட வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இது குறித்த பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் சாலை வீதிகளில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.