ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வனத்துறையினர் இன்று (ஆக. 11) 'கடலின் வேர்கள்' என்ற மாங்ரோவ் காடுகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டனர்.
கடல் சார்ந்த பரப்பளவு அதிக அளவில் உள்ளதால், அதன் கரையோரங்களை பாதுகாக்கும் விதமாக மாங்ரோவ் காடுகள் வனத்துறையின் மூலமாக 100 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

'கடலின் வேர்கள்'
இந்த மாங்ரோவ் காடுகள் கடலின் அரிப்பையும், மண் வளத்தையும், பல்லுயிர் பெருக்கத்தையும் கூட்டுவதில் முக்கியப் பங்கு ஆற்றி வருகிறது.
அதனைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கி ராமநாதபுரம் வனத்துறையின் சார்பாக 'கடலின் வேர்கள்' என்ற மாங்ரோவ் காடுகள் பற்றிய புத்தகத்தை ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் மாரிமுத்து தலைமையில், மாவட்ட வனத்துறை அலுவலர் அருண்குமார், வனச்சரகர் சதீஷ் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர்.
இதையும் படிங்க: 'செல்ஃபி எடுக்கும்போது கூவம் ஆற்றில் விழுந்த இளைஞர்'