ETV Bharat / state

ராமநாதபுரம் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...! - Ramanathapuram DISTRICT WATCH

வருடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளின் பாதம் படியும் பூமி ராமநாதபுரம்; மாவட்டத்தின் பழைய பெயர் முகவை. பாக் நீரிணைப்பில் வந்து வைகை நதி கலக்கும் முகத்துவாரத்தில் இருப்பதால் இப்பெயர். மதுரையிலிருந்தும், நெல்லையிலிருந்தும் பிரித்தெடுத்து வெள்ளையர்கள் உருவாக்கிய மாவட்டத்திற்கு அவர்கள் வைத்த பெயர் 'ராம் நாடு', அழகு தமிழில் ராமநாதபுரமாகி இருக்கிறது. மாவட்டத்தின் மேற்கே விருதுநகர் மற்றும் தூத்துக்குடியும், வடக்கில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையும், கிழக்கில் பாக் நீரிணையும், தெற்கில் மன்னார் வளைகுடாவும் எல்லை காக்கின்றன. முக்கியத் தொழில் விவசாயமும், மீன்பிடிப்பும்.

ramanathapuram district watch
ராமநாதபுரம் தொகுதிகள் வலம்
author img

By

Published : Mar 9, 2021, 5:43 PM IST

Updated : Mar 9, 2021, 7:48 PM IST

வாசல்:

நீரின்றி மருதமும், நெய்தலும் திரிந்து பாலையாகிருக்கும் இந்த மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதியும், ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய பொதுத் தொகுதிகளும், தனித்தொகுதியாக பரமக்குடியும் உள்ளது.

தொகுதிகள் உலா:

பரமக்குடி (தனி) : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதி பரமக்குடி. இங்கு விவசாயத்திற்கு அடுத்த படியாக நெசவு தொழில் அதிகமாக நடைபெறுகிறது. விவசாயிகள்,நெசவாளர்கள், வியாபாரிகள் அதிகம் வசிக்கின்றனர். வேலை வாய்ப்புகளை வழங்கும் பெரிய தொழிற்சாலைகள் ஏதுவும் இல்லை. இதனால் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

மிளகாயும், பருத்தியும் அதிகம் விளைவதால் பருத்தியை பிரித்தெடுக்கும் ஜின்னிங் மில்லும், மிளகாய் அரைக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள். பரமக்குடியிலிருந்து கமுதி வரையிலான சாலை விரிவாக்கப்பட வேண்டும். வைகை ஆற்றுப் பகுதியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தொகுதிவாசிகளிடம் உண்டு.

திருவாடானை: தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கண்மாயான ஆர்.எஸ். மங்கலம் கண்மாய் உள்ள தொகுதி. அதனாலேயே மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழ்கிறது. விவசாயமும், அதற்கடுத்தாக மீன்பிடிப்பையும் பிரதானமாகக் கொண்ட தொகுதி. திருப்பாலைக்குடி முதல் தொண்டி வரையிலான கடற்கரை பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது.

மாவட்டத்திற்கு காவிரி குடிநீர் வந்தும் தண்ணீர் தட்டுப்பாடு தீரவில்லை. கண்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும், திருப்பாலைக்குடி தொண்டி கடற்கரைப் பகுதிகளில் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருக்கிறது.

ராமநாதபுரம்: மூன்று புறம் கடலால் சூழப்பட்டு, ஒரு பக்கம் நிலப்பரப்பைக் கொண்ட தொகுதி ராமநாதபுரம். மும்மத வழிபாட்டுத் தலங்கள், தனுஷ்கோடி, தங்கச்சி மடம், பாம்பன் பாலம் போன்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்ட தொகுதி. விவசாயத்திற்கு அடுத்தபடியாக நடக்கும் மீன்பிடிப்பு பிரதான தொழில்.

தமிழ்நாட்டின் மீன் ஏற்றுமதியில் 20 விழுக்காடு அளவை எட்டும் அளவிற்கு கடற்கரை கிராமங்கள் அதிகம் கொண்டுள்ளன. இந்தத் தொகுதியின் பிரதான பிரச்னை முறையாக செயல்படுத்தப்படாத பாதாள சாக்கடை திட்டம். ராமநாதபுரம் நகர்பகுதிகளில் சாக்கடை நீர் சாலைகளில் ஒடுகிறது.

தொகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குப் புலம் பெயரும் அவலம் தொடர்கிறது. கட்சத்தீவு பிரச்னையால் இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்கின்றனர் தொகுதி வாசிகள்.

ராமநாதபுரம் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

முதுகுளத்தூர்: தென்மாவட்ட சாதி மோதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட தொகுதி முதுகுளத்தூர். தொகுதிகள் மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்ட இந்தத் தொகுதி, மக்கள், வியாபாரிகளின் தொடர் போராட்டங்களால் கடலாடி தொகுதி நீக்கப்பட்டு, முதுகுளத்தூர் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. மானாவாரி விவசாயமே பிரதான தொழில். வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்சாலைகளோ, சிறு நிறுவனங்களோ இல்லை. வேலைவாய்ப்புகளுக்கு தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். சாலைவசதிகளை பெருக்க வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

களநிலவரம்:

மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, கழிவுநீர் செல்ல வசதிகள் இல்லாதது என்ற பிரச்னைகளோடு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் இப்பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது தீர்வு எட்டப்படாத தொடர்கதையாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் இரண்டில் திமுகவும், இரண்டில் அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கிறது.

அதிமுக, திமுகவிற்கு இடையில் நேரடி போட்டி நிலவும் ராமநாதபுரம் மாவட்டத்தில், சில தொகுதிகளை காங்கிரஸூம், பாஜகவும் கேட்கின்றன. நேரடி போட்டி என்ற நிலையில் மதில் மேல் பூனையாக நிற்கிறது வெற்றி. வேட்பாளர் அறிவிப்பைப் பொறுத்தே கட்சிகளின் வெற்றி தோல்விகளை அனுமானிக்க முடியும் .

Last Updated : Mar 9, 2021, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.