ETV Bharat / state

வறட்சி நீங்கியும் வலி நீங்காமல் இருக்கும் விவசாயிகள் - இராமநாதபுரத்தில் வறட்சி நீங்கியும் வலி நீங்காமல் இருக்கும் விவசாயிகள்

ராமநாதபுரம்: நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை தாலுக்காவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

ramanathapuram district agriculture damage special news

author img

By

Published : Jan 29, 2020, 3:08 PM IST

ராமநாதபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ஆம் ஆண்டில் 914 மிமீ மழை பெய்தது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 358 மிமீ அதிகம், இதனால் மூன்று ஆண்டுகளாக மாவட்டத்தில் நிலவிய வறட்சியான சூழல் நீங்கி நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக 1.27 லட்சம் ஹெக்டரில் நெல் விவசாயத்தை மேற்கொண்டனர்.

ராமநாதபுரத்தில் பெய்த மழையால் அங்குள்ள திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, நயினார்கோவில் ஆகிய பகுதிகளில் நெல் விளைச்சல் நல்லமுறையில் நடைபெற்று மகசூல் கிடைத்துள்ளது. ஆனால் கீழக்கரை தாலுக்கவிற்கு உட்பட்ட பகுதிகளில் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் 350 ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது.

ஆனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால் நிலத்தில் மழை நீர் தேங்கி அறுவடை செய்ய இயலாத சுழல் உள்ளது. இந்த மழை சூழ்ந்த பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம்கொண்டு அறுவடை செய்ய இயலாததால் 300 ரூபாய் கூலிக்கு ஆட்களை வைத்து அறுவடை செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் 1 ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டை வரை நெல் கிடைக்கும். தற்போது வெறும் 10 முதல் 15 மூட்டைகள் மட்டுமே நெல் கிடைப்பதாக தெரிவித்த விவசாயிகள் இதனால் மூன்று மாதம் விவசாயம் செய்தும் விவசாயத்திற்குரிய பலனில்லை என்று தெரிவித்தனர். இதுபோன்று திரு உத்தரகோசமங்கை பகுதியிலும் அதே சூழல் உள்ளது.

மேலும் மாவட்டத்தில் அரசு மூலமாக 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நெல் பெறப்பட்டு வருகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது வரை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வராததால் பெரும்பாலான விவசாயிகள் வெளி நபர்களிடம் நெல்லை விற்பனை செய்துவருகின்றனர். இதை முறைப்படுத்தி உரிய லாபம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுக்கின்றனர்.

வலி நீங்காமல் இருக்கும் விவசாயிகள்

இது குறித்து வேளாண்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரத்தில் விவசாயம் நல்ல முறையில் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், மகசூலை பொறுத்தவரை எப்போதும் உள்ள அளவை விட இந்த ஆண்டு குறைந்து உள்ளதாக கூறிய அலுவலர்கள், சில இடங்களில் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். இதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றனர்.

இதையும் படிங்க: 24 ஆண்டுகளுக்கு பிறகு கொத்தடிமைத் தொழிலாளர் கணக்கெடுப்பு!

Intro:இராமநாதபுரம்

வறட்சி நீங்கியும் வலி நீங்காமல் இருக்கும் இராமநாதபுரம் விவசாயிகள்.

Body:இராமநாதபுரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்தது. கடந்த ஆண்டு மட்டும் 914 மி மீ மழை பெய்தது, இது ஆண்டு சராசரியை விட 358மிமீ அதிகம், இதனால் மூன்று ஆண்டுகளாக மாவட்டத்தில் நிலவிய வறட்சியான சூழல் நீங்கி நீர் நிலைகளில் நீர் நிரம்பியது. இதனால் மகிழ்ச்சியுடன் விவசாயிகள் 1.27 லட்சம் ஹெக்டரில் நெல் விவசாயத்தை மேற்கொண்டனர். இது 2018 ஆம் ஆண்டை விட 2 ஹெக்டேர் அதிகம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை,முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, நயினார்கோவில் பகுதிகளில் நெல் விளைச்சல் நல்ல முறையில் நடைபெற்று மகசூல் கிடைத்துள்ளது. ஆனால் இராமநாதபுரம் கீழக்கரை தாலுக்கவிற்கு உட்பட்ட பகுதிகளில் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக எக்ககுடி பஞ்சாயத்தில் 350 ஹெக்டேரில் நெல் விவசாயம் செய்தனர். ஆனால் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால் நிலத்தில் மழை நீர் தேங்கி அறுவடை செய்ய இயலாத சுழல் உள்ளது.இந்த மழை சூழ்ந்த பகுதிகளில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய இயலாத்தால் 300 ரூபாய் கூலிக்கு ஆள்களை கொண்டு மேற்கொண்டு அறுவடை செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் 1 ஏக்கருக்கு 35 முதல்40 மூட்டை நெல் வரை கிடைக்கும் ஆனால், தற்போது வெறும் 10 முதல் 15 மூட்டைகள் மட்டுமே கிடைப்பதாக இதனால் 3 மாதம் செய்தும் விவசாயத்திற்குரிய பலனில்லை என்று தெரிவித்தனர்.
இதுபோன்ற திரு உத்திரகோசமங்கையிலும் அதே சூழல் உள்ளது.

மேலும் மாவட்டத்தில் அரசு மூலமாக 15 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தும் அதன் மூலம் நெல் பெறப்பட்டு என அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் தற்போது வரை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வராததால் பெரும்பாலான விவசாயிகள் வெளி நபர்களிம் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இதை முறைபடுத்தி உரிய லாபம் கிடைக்கு வகையில் ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இராமநாதபுரத்தில்
விவசாயம்
நல்ல முறையில் நடைபெற்று உள்ளது மகசூலை பொறுத்தவரை எப்போதும் உள்ள அளவை விட இந்த ஆண்டு குறைந்து உள்ளது. சில இடங்களில் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.