ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்க்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் தொடர்சியாக ராமநாதபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பொற்கொடிக்குத் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அவர் நேற்று (மே 11) பிற்பகலில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் பிரதீப் குமார், நகரசபை ஆணையாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் உயரலுவலர்கள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்படுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.