ராமநாதபுரம்: தொடர் மழை காரணமாக மழை நீரில் மூழ்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அதை வெளியேற்றுவதற்கான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழை நீரில் மிதக்கின்றன. விவசாயத்தைப் பொறுத்தவரை விதைக்கப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அதனை கணக்கெடுக்கும் பணியில் வேளாண்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கும் நிலையில், இன்று (ஜன.14) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடலாடிக்கு உட்பட்ட சாயல்குடியில் மழை நீரை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் உடனடியாக மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.