இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், "ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் சேவை இயக்கப்படுகிறது. கரோனா நேரத்தில் ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் இயக்கப்படாததால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ரயிலை அடித்தட்டு மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பல்வேறு தேவைகளுக்காக மதுரையைச் சார்ந்தே உள்ளனர். தூரம் குறைவு காரணமாக ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் இயக்குவதில் சிரமம் இருந்தால், ராமேஸ்வரம் - பழனி என வழித்தடத்தை மாற்றி இயக்கலாம் " என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு கரோனா பரிசோதனை