ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்பி பட்டிணம் பேருந்து நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இன்ஜாலி என்ற முகமது ஸ்டாலின் என்பவரை சோதனை செய்தனர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து ரூ.3,490 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை - 5 பேர் கைது