மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முற்றுகையை தடுத்து நிறுத்தினர். இந்தப் போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினியும் அர்ஜுனமூர்த்தியும் முக்கிய ஆலோசனை