ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமத்தில் உள்ள நீர்நிலை, கோயில், மயானத்திற்கு உள்ள புறம்போக்கு நிலத்தை பஞ்சாயத்து தலைவர் அல்லா பிச்சை என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வேளி அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் நீர்நிலை பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டு வாடைக்கு விடவும் முயற்சி செய்துள்ளார். ஊர் பொது சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்படும் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேதாளை கிராமத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.