ராமநாதபுரம் மாவட்டம் உச்சப்புளி அருகே ஐஎன்எஸ் பருந்து கப்பல் தளம் உள்ளது. கார்கில் போர் 20ஆம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி இன்று காலை 10 மணி முதல் மாலை 2 வரை மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.
இதில் ஆளில்லா பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர், துப்பாக்கி ரகங்கள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டன. இதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 400க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். இது நம் நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, மாணவர் பூபதி ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ கார்கில் போரில் வெற்றியடைந்து 20 வருடங்களானாலும் இப்போதும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும்.
வீரர்கள் இறந்தது வருந்தக்கூடிய விசயம் என்றாலும், நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகத்தை நாம் போற்ற வேண்டும். கண்காட்சியில் நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்டோம். இதுபோல் நமது குழந்தைகளையும் படிக்க வைத்து பெரிய ஆளாக வளர்க்க வேண்டும்.”, என்று கூறினார்.