ETV Bharat / state

சாதிச் சான்றிதழ் தர்றியா; பாம்பை விடவா? - ஆட்சியர் அலுவலகத்தில் மெர்சல்

ராமநாதபுரம்: சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாம்புடன் முற்றுகையிட்டு காட்டு நாயக்கர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

community certificate
author img

By

Published : Aug 19, 2019, 5:47 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மேல பார்த்திபனூர் பரமக்குடி தாலுகாவில் உள்ள லீலாவதி நகரில் நூற்றுக்கணக்கான பழங்குடி காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்காமல் கடந்த 10 ஆண்டுகளாக அரசு காலம்தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். சாதிச் சான்றிதழ் இல்லாமல் இச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்புடன் கல்வியை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மக்கள் கூறுகின்றனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு மானுடவியல் பேராசிரியர் மூலம் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்களை ஆய்வு செய்து அந்த அறிக்கைகளின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தென்மாவட்டங்களில் உள்ள பல மாவட்டங்களில் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், ராமநாதபுரத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்களுக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்ததோடு அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு பாம்புகளுடன் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் மக்கள் உடுக்கை அடித்தவாறு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். பின்னர் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சாதி சான்றிதழ் கோரி பாம்புடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

இது குறித்து உரிய ஆய்வு நடத்தி சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து அங்கு வந்திருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

போராட்டத்திற்கு பாம்புகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு பழங்குடி மக்கள் வந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Intro:இராமநாதபுரம்
ஆக்.19

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பாம்புடன் முற்றுகையிட்ட காட்டு நாயக்கார் மக்கள்.

Body:இராமநாதபுரம் மாவட்டம் மேல பார்த்திபனூர் பரமக்குடி தாலுகாவில் உள்ள லீலாவதி நகர் ஆகிய கிராமங்களில் வாழும் பழங்குடி காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்த மக்கள், இவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்காமல் அரசு கடந்த 10 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாகவும், இதனால் அந்த சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிப் படிப்புடன் கல்வி நிறுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மானுடவியல் பேராசிரியர் மூலம் பழங்குடியின மக்களுக்கு வாழும் கிராமங்களை ஆய்வு செய்து அந்த ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தென்மாவட்ட உள்ள அநேக மாவட்டங்களில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் ராமநாதபுரத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது வரை சாதி சான்றிதழ் கிடைக்காததால் மிகப்பெரிய அளவில் கல்வியில் பின்தங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதை வழங்கக் கோரி பலமுறை மனுக்கள் மற்றும் அலுவலர்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை வழங்கவில்லை. இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி அலுவலத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு பாம்புகள், உடுக்கை அடித்தவாறு முற்றுகையிட முயற்சி செய்தனர்.
பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவை சந்தித்தனர். காட்டு நாயக்கர் சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து உரிய ஆய்வு நடத்தி ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து வந்திருந்த மக்கள் கலைந்து சென்றனர்.
காட்டு நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பாம்புடன் ஆட்சியர் அலுவலகம் வந்ததால் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.