ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேவுள்ள மல்லனூர் கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்ணாய் மூலம் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
இந்த கண்மாயை பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. கடந்த மாதம் கவுன்சிலர், அவரது மகன் ஆகியோர் சுமார் 60 ஆயிரம் ரூபாய் செலவில் கண்மாயின் அருகில் உள்ள வாய்காலில் சறுக்கை கட்டுவதற்காக வந்து பார்வையிட்டபோது தவறுதலாக கண்மாயின் மடையை உடைத்துவிட்டதாக அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
தற்போது கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக கண்மாய் நிரம்பிவிட்டது. மேலும், தண்ணீர் வந்துகொண்டுள்ள நிலையில் கண்மாய் மடையை உடைத்த பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் வீணாகி வருகிறது.
இந்நிலையில் விவசாயத்திற்கு பெரும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் இன்று காலையிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி அடைப்பை சரிசெய்தனர்.
மணலை போட்டு அடைத்தும் தண்ணீர் மேலும் வீணாகி வருகிறது. இதற்கு கவுன்சிலரின் மகன் தான் காரணம் என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அலுவர்கள் சாக்கு பைகளை கொடுத்துவிட்டு இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, அரசு துரித நடவடிக்கை எடுத்து உடைப்பு ஏற்பட்டதை அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மணல் கொள்ளை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!