தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் துணை ராணுவப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் 80 பேர் மூன்று வாகனங்களில் இன்று (மார்ச் 1) ராமநாதபுரத்திற்கு வந்துள்ளனர்.
இவர்கள் நாளைமுதல் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் பாதுகாப்பு பணி- துணை ராணுவம் சேலம் வருகை!