டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி அவசர மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்கு, நீதிபதிகள் அமர்வை ஏற்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகக் கூறி, சில வாரங்கள் கழித்து இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார்.
இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த இந்த வழக்கு, வரும் ஜூலை 26 அன்று விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 13) பட்டியலிட்டுள்ளது.
இதையும் படிக்க:நேரலையில் நித்தியானந்தா தரிசனம்- பேஸ்புக்கில் ஸ்பெஷல் என்ட்ரி