இதுதொடர்பாக இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நான்கு வழிச்சாலை திட்டத்தின் கீழ் சத்திரக்குடி கிராமத்தைச் சார்ந்த பல்வேறு விவசாய நிலங்கள், கால்வாய்கள் மற்றும் குடியிருப்புகளும் கையகப்படுத்தப் படுவதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சத்திரக்குடி கிராமம் வழியாக திட்டத்தை மாற்றி அமைத்தால் விவசாய நிலங்கள் பாதிப்பு அடையாத வகையில் தேவையான நிலங்கள் கிடைப்பதுடன், கிராமத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
கிராம மக்கள் கோரிக்கை
இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இது தொடர்பாக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசனும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்" என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 41 வருட தவம்: ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது இந்தியா