ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே துலுக்கன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால், உறவினர்கள் 10 ஆண்டுகளாக வனப்பகுதியிலுள்ள கருவேல மரத்தில், இரும்புச் சங்கிலியால் கட்டிப்போட்டு கவனித்து வந்தனர். அச்சம்வத்தை சிலர் காணொலிப் பதிவு செய்து ஃபேஸ்புக்கில் அண்மையில் பதிவிட்டனர்.
அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதனால் காரணமாக, முதுகுளத்தூர் வட்டாட்சியர் முருகேசன், வருவாய்த்துறை அலுவலர்களுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின் சீனிவாசனை மீட்டு புத்தேந்தல் கிராமத்திலுள்ள செஞ்சோலை காப்பகத்தில் சேர்த்தனர். அதன்காரணமாக வட்டாட்சியர் அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ராமநாதபுரம் சிறையில் கைதி உயிரிழப்பு