ETV Bharat / state

நள்ளிரவில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட விநோத விழா! - நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கு பெறும் வினோதத் கோயில்  திருவிழா

ராமநாதபுரம்: நள்ளிரவில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்ட எல்லைப் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவில் 100 ஆடுகளைப் பலியிட்டு வழிபாடு செய்து, எஞ்சிய சாதத்தைக் குழி தோண்டி புதைக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.

Mens Festival In Kamuthi
author img

By

Published : Oct 6, 2019, 11:58 PM IST

Updated : Oct 7, 2019, 8:36 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இக்கிராமத்தில் கடந்த மூன்று தலைமுறைகளுக்கு மேலாகக் கன்னிப்பெண் இறந்த காட்டுப் பகுதியில் பீடம் அமைத்து, எல்லைப்பிடாரி அம்மனாக வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லைப் பிடாரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுவருகிறது.

இத்திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டு வழிபடுவர். நள்ளிரவில் வழிபாடு தொடங்கி, பச்சரிசி சாதம் சமைத்து அதை உருண்டைகளாகப் பிடித்து, 100 ஆடுகளைப் பலியிட்டுச் சமைத்து, படையலிட்டு உண்ணும் விநோத வழிபாடு தற்போதும் தொடர்கிறது. இந்த ஆண்டு இவ்விழா சமீபத்தில் நிறைவுபெற்றது.

இத்திருவிழாவில் பருவமழை பெய்து, விளைச்சலில் அதிக மகசூல் கிடைக்க வேண்டும், நோய் தாக்கம் இன்றி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்னும் வேண்டுதல்களை வைத்து வழிபாடு நடைபெற்றது. விழாவில் கமுதி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்டனர்.

ஆண்கள் மட்டும் பங்கு பெற்ற விநோத திருவிழா

இவர்களுக்குப் படையலிட்ட பச்சரிசி சாத உருண்டைகள், ஆட்டுக்கறிகள் பரிமாறப்பட்டன. அனைவரும் உண்டபின் எஞ்சிய உணவுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பதால், அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்துவிட்டனர். நவீனக் காலத்திலும் இதுபோன்ற விநோத சடங்குகள் நடைபெறுவது வேடிக்கையாக உள்ளது.

Intro:இராமநாதபுரம்
அக்.6

கமுதியில் நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே பங்கு பெறும்
எல்லை பிடாரி அம்மன் கோயில் திருவிழா 100 ஆடுகள் பலியிட்டு வழிபாடு எஞ்சிய சாதத்தை குழி தோண்டி புதைக்கும் வினோதம்.Body:இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் கடந்த மூன்று தலைமுறைகளுக்கு மேலாக கன்னிப்பெண் இறந்த இடத்தில் காட்டுப் பகுதியில் பீடம் அமைத்து, எல்லைப்பிடாரி அம்மனாக வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லை பிடாரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு வழிபடுவர். நள்ளிரவில் வழிபாடு தொடங்கி, பச்சரிசி சாதம் சமைத்து அதை ஊருண்டைகளாக பிடித்து, 100 ஆடுகளை பலியிட்டு சமைத்து, படையலிட்டு உண்ணும் வினோத வழிபாடு தொடர்கிறது.

இந்த ஆண்டு நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று காலை விழா நிறைவு பெற்றது. திருவிழாவில் பருவமழை பெய்து, விளைச்சலில் அதிக மகசூல் கிடைக்க வேண்டும், நோய் தாக்கம் இன்றி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டுதலை வைத்து வழிபாடு நடைபெற்றது.

விழாவில் கமுதி சுற்று வட்டார பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கமுதி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு படையலிட்ட பச்சரிசி சாத உருண்டைகள், ஆட்டுக்கறி பரிமாறப்பட்டது. அனைவரும் உண்டபின் எஞ்சிய உணவுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பதால், அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்துவிட்டனர்.Conclusion:
Last Updated : Oct 7, 2019, 8:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.