ETV Bharat / state

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை! - Arattu Festival

ராமநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை, ஆராட்டு விழா தகுந்த இடைவெளி கடைபிடித்து முகக்கவசம் அணிந்து ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீ ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை மற்றும் ஆராட்டு விழா

author img

By

Published : Dec 26, 2020, 2:50 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கடந்த 27ஆம் தேதி கார்த்திகை முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

26ஆம் தேதியான இன்று மண்டலபூஜை நடைபெறுவதையொட்டி, அதிகாலை ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மண்டலபூஜை மற்றும் ஆராட்டு விழா நடைபெற்றது.

ஆராட்டு விழாவிற்கு குருசாமி மோகன் தலைமையில் வல்லபை ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி ஐயப்ப பக்தர்கள் ஆலயத்துக்கு வரும் போது முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென ஆலயத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். ஆலயத்திற்கு வந்த அனைவருக்கும் தகுந்த இடைவெளியுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: வாகன சோதனையில் ஒன்றரை கிலோ கஞ்சா, வாள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.