ETV Bharat / state

ஆன்லைன் கேம் விளையாடி 90,000 ரூபாய் காலி செய்த சிறுவன் - பெற்றோர் வழங்கிய நூதன தண்டனை! - சாயல்குடி அருகே சிறுவன் ஃபிரி ஃபயர் கேம்

ராமநாதபுரம் : சாயல்குடி அருகே ’ஃபிரீ ஃபயர்’ என்னும் ஆன்லைன் கேம் விளையாடி, பெற்றோர் வங்கிக் கணக்கிலிருந்த 90 ஆயிரம் ரூபாயை காலி செய்த சிறுவனுக்கு, அவனது பெற்றோர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

game
game
author img

By

Published : Sep 19, 2020, 12:11 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது மேலக்கிடாரம். இப்பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கு 13 வயது சிறுவன், தனது தந்தையின் மொபைல்போனில் ஆன்லைன் கேம் விளையாடத் தொடங்கி, அதில் ’ஃபிரீ ஃபயர்’ என்கிற மொபைல் கேமிற்கு அடிமையாகியுள்ளான்.

game
Online game

தொடர்ந்து, கேம் அப்டேட், ஆயுதங்கள் வாங்க என தனது தாயின் வங்கிக் கணக்கு கடவுச் சொல்லைப் பயன்படுத்தியும் 1000, 1500 ரூபாய்கள் என அவ்வப்போது அச்சிறுவன் செலவழித்து வந்துள்ளான்.

அதிர்ச்சி

இந்நிலையில், ராமநாதபுரம் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தங்களது வங்கிக் கணக்கில், முன்னதாக ஒரு லட்சம் ரூபாய் இருந்தநிலையில், இவர்கள் சென்று விசாரித்தபோது 10 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து வங்கி மேலாளரிடம் விசாரித்தபோது, ஆன்லைன் கேம் மூலமாக அத்தொகை அவர்களது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வீட்டில் வந்து தங்களது மகனிடம் இதுபற்றி கேட்டபோது, ஆன்லைன் கேம் விளையாட செலவு செய்ததைச் சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளான்.

நூதன தண்டனை

அதனைத் தொடர்ந்து பணத்தின் மதிப்பை தங்களது மகனுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணிய பெற்றோர், நூதன தண்டனை ஒன்றை சிறுவனுக்கு வழங்கினர். ஒரு நோட்டில் ஒன்று, இரண்டு, மூன்று என 90 ஆயிரம் வரை எழுதக் கூறியுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாயிரம் வரை மட்டுமே எழுதிய சிறுவன், கை வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளான். அதனைத் தொடர்ந்து, எண்களை எழுதவே கை வலிப்பதைக் குறிப்பிட்டும், பணம் சம்பாதிப்பதிற்கு போட வேண்டிய உழைப்பு குறித்து தெரிவித்தும் பணத்தின் அருமையைப் புரிந்து கொள்ளுமாறு தங்களது மகனுக்கு அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த சாயல்குடி ஆன்லைன் கேம் சம்பவம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.