இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பம்மனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மகன்கள் காந்தி(27) மற்றும் ராஜேஷ்(23) குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தனர். கரோனா ஊரடங்கு காணமாக சொந்த ஊரான பம்மனேந்தல் கிராமத்திற்கு வந்துள்ளனர். கடந்த 13 ஆம் தேதி ராஜேஷ் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் காந்தியை காவல்துறையினர் தேடி வந்தனர்.
நண்பருக்கு தொடர்பு
இந்நிலையில், கருவேலங்காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த காந்தியை கைது செய்து விசாரித்த போது ராஜேஷ் கொலையில் காந்திக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களுடன் மது அருந்திய வழிவிட்டானை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவருக்கு கொலையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "கடந்த 13ம் தேதி கொலை செய்யப்பட்ட ராஜேஷ் பரமக்குடி பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளார். 15ஆம் தேதி இரவில் காந்தி, ராஜேஷ், மற்றும் நன்பர் காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து முதுகுளத்தூர் அருகே உள்ள எட்டிசேரி மதுபானக் கடையை உடைத்து 270 மதுபாட்டில்களை திருடி உள்ளனர். அதனைதொடர்ந்து 16ம் தேதி அதிகாலை திருடிய மதுபாட்டில்களை பம்மனேந்தல் கிராமத்திற்கு கொண்டு சென்று குடித்துள்ளனர்.
கொலை - தப்பியோட்டம்
அப்போது அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் வழிவிட்டான்(27) என்பவரும் அவர்களுடன் மது குடித்துள்ளார். மதுபோதையில் காந்தி மற்றும் வழிவிட்டான் இடையே சண்டை ஏற்பட்டதில் காந்தி ஆத்திரமடைந்து வழிவிட்டானை செங்கலால் தாக்கி உள்ளார். இதில் தலையில் காயம் அடைந்த வழிவிட்டான் ஆத்திரத்துடன் வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வரும் போது, ராஜேஷ் மட்டும் இருந்ததை கண்டு அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.
கைது - சிறையில் அடைப்பு
வழிவிட்டானிடம் சண்டை போட்ட காந்தியும், உடன் மது அருந்திய காளீஸ்வரனும் கமுதிக்கு வரும் வழியில் பெருநாழி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் செந்திலின் இருசக்கர வாகனங்கத்தை மறித்து அவருடைய செல்போனை பிடுங்கி கொண்டு தப்பியோடியுள்ளனர்". என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வழிவிட்டான் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : முதலமைச்சர் அனைத்து மக்களுக்கும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறார்- அமைச்சர் ரகுபதி