உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கரானோ வைரஸை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மலேசியா, பிரான்ஸ், மஸ்கட், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பரமக்குடி திரும்பிய 13 பேரின் பட்டியலை வைத்து அவர்கள் வீடுகளை கண்டறிந்து அவர்களை வெளியே செல்ல வேண்டாம் என்று வருவாய்த் துறையினர், நகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.
மேலும் அவர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு மூன்று துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மூலம் இவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... மதுரையில் நடைபாதைவாசிகளை பராமரிக்கும் தன்னார்வலர்கள்