ETV Bharat / state

சர்வதேச விருது பெற்ற தமிழ்நாடு வனச்சரகர்!

ராமநாதபுரம்: தமிழ்நாட்டை சேர்ந்த வனச்சரகர் சதீஷ், மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றதற்கான சர்வதேச விருதைப் பெற்றுள்ளார்.

சர்வதேச விருது பெற்ற வனச்சரகர்
சர்வதேச விருது பெற்ற வனச்சரகர்
author img

By

Published : Apr 8, 2021, 6:14 PM IST

உலகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாகப் பணியாற்றி வரும் 10 வனச்சரக அலுவலர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதை சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் வழங்குகிறது. இதற்காக 100 நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட வனச்சரகர்கள் விண்ணப்பித்தனர்.

சர்வதேச விருது பெற்ற வனச்சரகர்

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா பகுதியில் கடல் அட்டை கடத்தலுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் பதிவு செய்ததற்காகவும், அலையாத்தி காடுகளில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காகவும் வனச்சரகர் சதீஷ் என்பவரது பெயரை இவ்விருதுக்காக மூத்த அறிவியல் அறிஞரான சிவக்குமார் முன்மொழிந்தார்.

இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி இணையதளத்தில் நடைபெற்றது. அப்போது வனச்சரகர் சதீஷுக்கு விருதும், 7.25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து வனச்சரகர் சதீஷ் கூறும்போது, "இந்த விருதை இந்தியாவில் உள்ள அனைத்து வனச்சரக அலுவலர்களுக்கும், மன்னார் வளைகுடாவில் பணி செய்ய வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு வனத்துறைக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார்.

இவர் முன்னதாக 2019ஆம் ஆண்டு 'எர்த் ஹீரோஸ்' என்ற விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வாழ்த்துகள் ரஜினிகாந்த் ஜி!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.