ETV Bharat / state

மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவர் போலீஸில் சரண் - கணவர் கைது

ராமநாதபுரம்: மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.

murder
murder
author img

By

Published : Mar 20, 2020, 10:56 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த முனீஸ்வரன், சில மாதங்களுக்கு முன்புதான் ஊர் திரும்பியுள்ளார்.

முனீஸ்வரன் வெளிநாட்டில் இருந்த போது குடும்ப செலவுக்கு பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஊர் திரும்பிய முனீஸ்வரனிடம் தனலெட்சுமி சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் தனலெட்சுமியின் நகைகளைக் கேட்டு முனீஸ்வரன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மனைவியைக் கழுத்தை நெறித்து முனீஸ்வரன் கொலை செய்துள்ளார். பின்னர் அவர் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

murder
கைதான முனீஸ்வரன்
murder
கொலைசெய்யப்பட்ட தனலெட்சுமி

காவல் துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று தனலெட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து முனீஸ்வரனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.