ETV Bharat / state

கோட்டக்கரை ஆற்றிலிருந்து சட்டவிரோத மணல் திருட்டு - அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு - ஆர் எஸ் மங்கலத்தில் உபரி மண் அள்ளும் விவகாரம்

மதுரை: ஆர்.எஸ். மங்கலத்தில் உபரி மண் அள்ள உரிமம் பெற்றுக்கொண்டு, கோட்டைக்கரை ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க கோரி உயர் நீதிமன்றம் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

sand theft issue
madras high court madurai bench
author img

By

Published : Oct 30, 2020, 7:49 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் உபரி மண் அள்ள உரிமம் பெற்றுக்கொண்டு, கோட்டைக்கரை ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடர்பான புகைப்படங்கள் தாக்கல்செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள், "மனுதாரர் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது 5 முதல் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மணல் அள்ளப்பட்டுள்ளது தெரிகிறது.

இது தொடர்பாக ஆய்வுசெய்ய வழக்கறிஞர் பி. கணபதி சுப்பிரமணியன், வழக்கறிஞர் ஆணையராக நியமிக்கப்படுகிறார். அவர் உபரி மண் அள்ள உரிமம் பெற்ற இடத்தில் ஆய்வு நடத்தி, பட்டா நிலத்தில் உபரி மண் அள்ள அனுமதி பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? அந்த மண் எந்த வகையானது? கோட்டைக்கரை ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? உரிமம் பெற்ற இடத்திலிருந்து ஆறு எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சவ்டு மண் மற்றும் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள், குத்தகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆண்டு வாரியாக அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவு பிறப்பித்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.