புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் நேற்று (டிச. 03) ராமநாதபுரத்தில் பெய்த மழையின் அளவு 36.50 மில்லி மீட்டரும், மண்டபத்தில் 54.00 மில்லி மீட்டரும், தீர்த்தாண்டதானத்தில் 62.00 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக, ராமேஸ்வரத்தில் 204.00 மில்லி மீட்டரும், வட்டாணம் 54.00 மில்லி மீட்டரும், திருவாடனையில் 61.20 மில்லி மீட்டரும் பாம்பனில் 72.20 மில்லி மீட்டரும், தொண்டியில் 66.60 மில்லி மீட்டரும், தங்கச்சிமடத்தில் 82.20 மில்லி மீட்டர் என மொத்த மழையின் அளவு 848.80 மில்லி மீட்டராகப் பதிவாகியுள்ளதாக சென்னை வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருவையாறில் ஏழு வீடுகள் இடிந்து சேதம்!