ETV Bharat / state

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு! - Ramanathapuram latest news

வரும் (அக்) 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கான தங்கக் கவசத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று அணிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு!

author img

By

Published : Oct 26, 2021, 7:13 AM IST

ராமநாதபுரம்: வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114ஆவது ஜெயந்தி, 59ஆவது குருபூஜை விழா கமுதி அருகேயுள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்படவுள்ளது.

முன்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 13.7 கிலோ எடை கொண்ட தங்கத்தாலான கவசத்தை வழங்கினார். மதுரை தனியார் வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கக்கவசத்தை, ஆண்டுதோறும் அக்டோபர் 25ஆம் தேதி ஜெயந்தி விழாவுக்காக ஒப்படைப்பதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தங்கக்கவசமானது தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் நேற்று (அக்.25) ஒப்படைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு அணிவித்தனர்.

இதையும் படிங்க: கலை உலக சாதனை புரிந்த ரஜினிகாந்த்திற்கு தமிழிசை வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.