ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள ஏா்வாடி தர்காவுக்கு வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமானோர் வந்து தங்கியிருந்து மனநல சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த தர்காவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா, கடந்தாண்டு (2020) கரோனா காரணமாகப் பக்தர்களின்றி நடைபெற்றது.
பக்தர்களின்றி நடைபெற்ற கொடியேற்றம்
இந்நிலையில், இந்தாண்டு சந்தனக்கூடு விழா வரும் ஜூலை 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழாவுக்கான கொடியேற்றம் நேற்று மாலை தர்கா வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
சந்தனக்கூடு விழா
இதைத்தொடர்ந்து ஜூலை 4ஆம் தேதி சந்தனக்கூடு விழாவும், ஜூலை 5ஆம் தேதி புனிமக்பராவில் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஜூலை 11இல் குரான் ஓதுதலும், அன்று மாலை கொடியிறக்கமும் நடைபெறும் என தர்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’நாளைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ - விஜய் மக்கள் இயக்கம்