ராமநாதபுரத்தில் நேற்று தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவில் இருப்பவர்கள் தவிர்த்து, பிற நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
மேலும், அம்மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் உட்பட 137 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஓலக்கூடாவைச் சேர்ந்த இரண்டு பெண் செவிலியருக்கு கரோனா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதுதவிர, பரமக்குடியைச் சேர்ந்த 19 வயது பெண், சக்கரக்கோட்டையைச் சேர்ந்த 43 வயது பெண், சென்னையில் இருந்து வந்த தொண்டி பகுதியைச் சேர்ந்த 63 வயது நபர் ஒருவர் ஆகியோருக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : அமைச்சர் கரோனா நிவாரண உதவி!