ராமநாதபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில், அம்மாவட்டத்தின் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த ஐந்து பேருக்கு, புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கீழக்கரையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உள்பட நான்கு ஆண்களுக்கும், 26 வயது பெண்ணுக்கும் தற்போது தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 29 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், 33 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க : திருநங்கைகள் 119 பேருக்கு ரூ. 1000 உதவித் தொகை வழங்கல்