கடல் வளத்தை பெருக்குவதற்காக மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகள் இயக்கவும், கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் அரசு தடை விதித்து வருகிறது.
நாளைமுதல் மீன்பிடி தடைகாலம்
இந்த ஆண்டிற்கான தடைகாலம் நாளை (ஏப்.15) முதல் தொடங்குகிறது. நாளையிலிருந்து தொடங்கி ஜூன் 14ஆம் தேதிவரை 61 நாள்கள் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக கடல் வளம் பெருகும், மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என மீன்வளத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அதிக அளவு கடற்பரப்பைக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம் மண்டபம், பாம்பன் தொண்டி, ஏர்வாடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும்
இதைத் தொடர்ந்து மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதியை அதிகரித்துத் தர வேண்டுமென்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருக்கக்கூடிய காலத்தில் படகுகளை பழுதுபார்க்க அரசு ஒவ்வொரு படகுக்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மீனாட்சி திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு செக்வைத்த கோயில் நிர்வாகம்'