ETV Bharat / state

மீனவப்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் - murder

ராமேஸ்வரம் அருகே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததால், இறால் பண்ணையை அடித்து நொறுக்கி, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவ பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை- போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

author img

By

Published : May 25, 2022, 10:56 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே உள்ள மீனவ கிராமத்தைச்சேர்ந்தவர், கவி (45 - பெயர் மாற்றப்பட்டது). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கடல் பாசி சேகரிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச்சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் கவியை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (மே 24) காலை வழக்கம் போல், கடல் பாசி சேகரிக்க சென்ற போது, கவியை இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தனர். மேலும், அவருடைய உடலை மறைக்கும் நோக்கத்தோடு தீ வைத்து எரித்துள்ளனர்.

கடல் பாசி சேகரிக்க சென்ற கவி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கடலோரப் பகுதியில் தேடியுள்ளனர். பின்னர், ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் கவியைத் தேடியுள்ளனர். அப்போது, காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த கவியின் உடலை கண்டுபிடித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கவியின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள், இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதுடன் அதில் பணியாற்றிய வடமாநிலத்தவர்கள் தான் கவியை கூட்டுப்பாலியல் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவர்களையும் சரமாரியாக தாக்கி, அவர்களின் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.

இதனால் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வடமாநிலத்தொழிலாளர்கள் 6 பேரையும் பிடித்த காவல் துறையினர் விசாரணைக்காக அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் பெண்ணை கூட்டுப்பாலியல் செய்து கொலை செய்த இடத்திலும், சேர்ந்த இறால் பண்ணை இயங்கி வந்த இடத்திலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

இதைத்தொடர்ந்து அலுவலர்கள் ஆய்வு செய்ததில் அனுமதியின்றி இயங்குவதாக கூறி, தனியார் இறால் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பை ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியை காரில் கடத்தி தாலி கட்டிய இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.