ETV Bharat / state

மாயமான மீனவரை மீட்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

author img

By

Published : Oct 3, 2020, 2:27 AM IST

ராமநாதபுரம்: கடலில் மாயமான மீனவரை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

strike
strike

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தனிஷ்லாஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் இன்னாசி, ஜோகன், இளங்கோ, இம்மானுவேல், சுவித்து, சேதுபாண்டி, கார்சன் ஆகிய ஏழு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கார்சன் (23) என்ற மீனவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார்.

உடன் சென்ற சக மீனவர்கள் இரவு வரையிலும் தேடியும் கிடைக்கவில்லை. அக். 1ஆம் தேதி கரை திரும்பிய மீனவர்கள் மீன்வளத் துறையினருக்கும், கடலோரக் காவல்படையினருக்கும் தகவல் அளித்தனர்.

மேலும் இரண்டு விசைப்படகுகளில் 14 மீனவர்கள், மாயமான மீனவர் கார்சனை தேடினர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே இன்று மீனவப் பிரதிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் மாயமான மீனவரை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் மாயமான மீனவர் நீரோட்டத்தினால் இலங்கை கடற்பகுதிக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதால் மத்திய அரசு உடனே தலையிட்டு மாயமான மீனவரை விரைந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.