ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள வாணியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.
இன்று (ஜூன்.15) காலை வழக்கம்போல வைகை ஆற்றுப்படுகையில் இவர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றுப் படுகையில் உள்ள சகதியில் மாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த சக மீனவர்கள் அவரது உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து உச்சிப்புளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.