வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், இராமநாதபுரம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவ மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி