ETV Bharat / state

நிதி நிறுவன மோசடி வழக்கு: பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

author img

By

Published : Mar 24, 2021, 7:09 AM IST

மதுரை : ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த நிறுவனத்தின் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரப்பட்ட நிலையில், நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Financial institution fraud case
Financial institution fraud case

ராமநாதபுரத்தைச் சேர்ந்த செய்யது அபுதாகீர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ”மதுரை வடக்குமாசி வீதியில் செயல்பட்ட க்ரீன் டெக், ஜி கேர் என்ற தனியார் நிதி நிறுவனம், முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக பணம் வசூலித்தனர். ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகவும், 13ஆவது மாதத்தில் முதலீட்டை திருப்பித் தருவதாகவும், மேலும் பல்வேறு திட்டங்களைக் குறிப்பிட்டு அதற்கேற்ப வட்டி தருவதாகவும் கூறினர்.

தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், கோவை, பெங்களூரு மட்டுமின்றி ஹாங்காங், மலேசியா, துபாய், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட நாடுகளிலும் கிளை அமைத்து அவர்கள் முதலீட்டை வசூலித்தனர். பின்னர் ஓராண்டுக்குள் நிறுவனம் மூடப்பட்டது. பலருக்கு முதலீட்டு பணமும், வட்டியும் தராமல் நிறுவனம் ஏமாற்றிய நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி நிறுவனத்தைச் சேர்ந்த அனீஸ் முகம்மது என்பவரை கைது செய்தனர்.

இந்த நிறுவனத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் 35 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவினர் விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இந்த மோசடி வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி, குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்யுல்மாறு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.ஹேமலதா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்து விட்டேன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.