ETV Bharat / state

தன் இதயத்தால் இறந்த பின்னரும் வாழப்போகும் இந்திரா!

author img

By

Published : Sep 18, 2019, 12:08 PM IST

ராமநாதபுரம்: மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை அவரின் பிள்ளைகளே முன்வந்து தானம் செய்துள்ளனர்.

இறந்த பின்னரும் வாழப்போகும் இந்திரா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் இந்திரா(48). கணவனை இழந்த இவர் கூலி வேலைசெய்து தனது மகனையும் நான்கு மகள்களையும் வளர்த்து படிக்க வைத்தார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு, வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்த இந்திரா, உடனே பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று இந்திராவின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகிய உறுப்புகளை அவரது பிள்ளைகள் தானமாக அளித்துள்ளனர்.

இறந்த பின்பும் இதயத்தால் வாழப்போகும் இந்திரா!

இது குறித்துப் பேசிய இந்திராவின் மகன், எனது தந்தை இறந்தபின் கடந்த 13 ஆண்டுகளாக என்னையும், எனது சகோதரிகளையும் கூலி வேலை செய்து வளர்த்த எனது தாய் திடீரென மூளைச்சாவு அடைந்தது எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எனது மூன்று சகோதரிகளுக்கும் திருமணமாகவில்லை. எங்களது குடும்பம் வறுமையில் உள்ளது. எனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் நிவாரண நிதியும் வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.

இதையும் படியுங்க:

'உடலுறுப்பு தானம் செய்ய அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை' -விஜய பாஸ்கர்

Intro:இராமநாதபுரம்
செப்.17

மூளைச்சாவு அடைந்த பரமக்குடி பெண்ணின்
இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானம் முன்வந்த குடும்பத்தினர். Body:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி இந்திரா 48. இவர்களுக்கு, ஒரு ஆண், 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் திருமணமாகியுள்ளது. கருணாகரன் மலேசியாவில் வேலை பார்த்து வந்தபோது, கடந்த 2006-ம் ஆண்டு இறந்து விட்டார். அதனையடுத்து இந்திரா கூலி வேலைபார்த்து குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்தார்.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு இந்திரா, வீட்டில் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு ஒன்றிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று இந்திராவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அதன்பின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகளை தானம் செய்யப்பட்டது. இதில் இதயம் சென்னை தனியார் மருத்துவமனைக்கும் மற்ற உறுப்புகள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்திராவின் மகன் ஆட்டோ ஓட்டுநரான பாண்டி கூறியதாவது, எனது தந்தை இறந்த பின் கடந்த 13 ஆண்டுகளாக என்னையும், எனது சகோதரிகளையும் கூலி வேலை பார்த்து வளர்த்து படிக்க வைத்தவர் எனது தாய். ஆனால் அவர் திடீரென மூளைச்சாவு அடைந்தது எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. எனது 3 சகோதரிகளுக்கு திருமணமாகவில்லை. எங்களது குடும்பம் வறுமையில் உள்ளது. எனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.