ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக் கோரி மீனவர்களின் உறவினர்கள் காத்திருப்புப் போராட்டம்

இலங்கை சிறையிலுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி கைக்குழந்தைகளுடன் மீனவர்களின் உறவினர்கள் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Fishery srilanka navy rameswaram
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக் கோரி மீனவர்களின் உறவினர்கள் காத்திருப்பு போராட்டம்
author img

By

Published : Jan 29, 2021, 5:53 PM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 8ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிருபை என்பவருக்குச் சொந்தமான கிருபை, வன்கௌசிக், மிக்கோயாஸ், சாம்ஸ்டில்லர், கினிங்ஸ்டன், பிரைட்டன், நிஜான், கிசோக், மாரி ஆகிய 9 மீனவர்கள் பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுகளுடன் பிடித்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

இது ராமேஸ்வரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 20 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் மீனவர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்தச் சூழ்நிலையில், கைதுசெய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள், கடல் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் முருகானந்தம் தலைமையில் தாலுகா அலுவலகத்தின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக் கோரி மீனவர்களின் உறவினர்கள் காத்திருப்புப் போராட்டம்

ராமேஸ்வரம் வட்டாட்சியர் ஜப்பார், மீன்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும், மேலும் சிறையில் உள்ள மீனவர்களை செல்போனில் குடும்பத்தினரிடம் பேச வைப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: திருவாடானையில் கருணாஸ் போட்டியில்லையாம்: காரணம் இதுதானா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.